என்ன இப்படி எழுதி வச்சிருக்காங்க! சென்சார் செய்யப்பட்ட வில்லங்கமான தமிழ் பாடல் வரிகள் இதோ

First Published | Sep 4, 2024, 9:44 AM IST

Censored Tamil movie songs : தமிழ் சினிமாவில் குஜாலாக எழுதப்பட்ட பாடல்வரிகளை சென்சார் போர்டு கத்திரி போட்டு தூக்கிய சம்பவங்கள் நிறைய உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

Na Muthukumar

இன்றைக்கு இருக்கும் சென்சார் போர்டை விட அந்த காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த சென்சார் போர்டு ரொம்ப ஸ்டிரிக்ட் ஆக இருந்திருக்கிறார்கள். பாடல்கள்ல சாதி, மதம், போதை பற்றி ஏதேனும் ஒரு வரி வந்தாலே சென்சார் போர்டு கத்திரி போட்டு விடுவார்களாம். அப்படி சென்சார் போர்டால் கத்திரி போட்டு தூக்கப்பட்ட தமிழ் பாடல்கள் பற்றி பார்க்கலாம்.

90ஸ் கிட்ஸ் வெறித்தனமா வைப் பண்ணிய பாடல் என்றால் அது ரன் படத்தில் வரும் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டா பாடல் தான். நா முத்துக்குமார் எழுதிய அப்பாடலில் ஒரு வரியை மட்டும் சென்சார் பண்ணி இருக்கிறார்கள். அது என்னவென்றால், ‘தாராளமா மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சிக்கோ’ என்கிற வரி தான். இதில் மனசிருந்தா என்பது இரட்டை அர்த்தத்தில் உள்ளதால் அதை சென்சார் செய்துவிட்டார்கள். 

Vaali, Vairamuthu

நண்பன் படத்திற்காக நா முத்துக்குமார் எழுதிய பாடல் தான் ஹார்ட்டிலே பேட்டரி. இப்பாடலில் ‘மாச கடைசியில் துட்டும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்.. துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்’ என்கிற வரி இடம்பெற்று இருக்கும். ஆனால் இது சென்சார் செய்யப்பட்ட வரிகள். முதலில் ‘மாச கடையில் கிங்ஸும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்’ என எழுதி இருக்கிறார் நா முத்துக்குமார். அதை தான் சென்சாரில் தூக்கிவிட்டார்கள்.

மங்காத்தா படத்திற்காக வாலி எழுதிய வாடா பின்லேடா பாடலிலும் ஒரு சென்சார் செய்யப்பட்ட வரிகள் இருக்கிறது. அதில், ‘நூலாடை நிக்காத இடுப்பு... நீதான் என் தோதான உடுப்பு’ என்கிற வரி இருக்கும். அது சென்சார் வெர்ஷனாம். ஆனால் குசும்புக்கார வாலி, முதலில் எழுதியது, ‘நூலாடை நிக்காத இடுப்பு... நீ வந்து சோறாக்கும் அடுப்பு’ என எழுதி இருக்கிறார். திரிஷாவின் இடுப்பை அடுப்போடு ஒப்பிட்டு வாலி எழுதியதால் சென்சாரில் கத்திரி போட்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோட்!!

Tap to resize

Vaali

டபுள் மினிங்ல பாட்டெழுதுவதில் தான் ஒரு கில்லாடி என்பதை காக்கிசட்டை படத்தில் வரும் ‘சிங்காரி சரக்கு’ பாடலில் காட்டி இருப்பார் வாலி. அதில் வரும் ‘தின்னாலே ருசிக்குமடா இத சொல்லாத ஆளும் இல்ல’ என்கிற வரி ரொம்ப சிம்பிளா இருக்குன்னு தான் நினைக்குறீங்க. இது சென்சார் வெர்ஷனாம். முதலில் வாலி எழுதியது, ‘தின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரை வடை’ என்ற வரிகள் தானாம். ஆனால் அதற்கு சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டது.

சாக்லேட் படத்தில் இடம்பெறும் ‘மலை மலை’ பாடல் மிகவும் பாப்புலர் ஆனது. இந்த பாடல் வரிகளை வாலி தான் எழுதி இருந்தார். இதன் முதல் வரியே சென்சாரில் சிக்கியது. வாலி, மலை மலை மலை மருதமலை என எழுத அதற்கு சென்சார் போர்டு கத்திரி போட்டதால் மலை மலை மலை மலை என மாறியது. 

சரோஜா படத்திற்காக வாலி எழுதிய கோடான கோடி பாடலும் சென்சாரில் சிக்கிய பாடல் தான். இந்த பாடலில் பல்லவியில் வரும் ‘சிங்காரி நான் அழகு கொடி... நீ ஏத்து நம்ம வெற்றிக்கொடி’ என்ற வரிகள் சென்சார் வெர்ஷன் தான். அதற்கு முன்னர், ‘சிங்காரி நீ அழுத்திப்புடி.. கொடி ஏத்தி தூக்கிப்புடி’ என்கிற ஏடாகூடமான வரிகள் இருந்ததால் அதற்கு சென்சாரில் கத்திரி போட்டுள்ளனர்.

Vairamuthu

முதல் மரியாதை படத்தில் வரும் ‘அந்த நிலாவ தான் கையில புடிச்சேன்’ பாடலில் சரணத்தில் வரும் ஒரு வரியில் ஹீரோ, ‘ஓடிவா ஓடப்பக்கம் ஒளியலாம் பொதுவாக’ என பாடுவார். அதற்கு ஹீரோயின் ‘அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக’ என பதிலுக்கு பாடி இருப்பார். ஆனால் இது சென்சார் வெர்ஷன். இதற்கு முன்னர், மாசத்துல மூணு நாளு ஒதுக்கணும் பொதுவாக என்கிற வரி தான் இருந்ததாம். அந்த காலத்தில் மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேசமாட்டார்கள். பாடலில் எப்படி வைக்கலாம் என சென்சாரில் கத்திரி போட்டுள்ளனர்.

Ilaiyaraaja, Vairamuthu

தேவதையைக் கண்டேன் படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரே தோப்புல ஒரே ஒரு மாமரம் பாடலில் சில குஜாலான வரிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த பாடலில் சிலோன் மனோகர் எழுதிய, ‘பழம் இருக்கும் எடுத்துக்கலாம்... இந்த பழம் இருக்கு தின்னுக்கலாம்’ இந்த வரிகள் சென்சாருக்கு பின் மாற்றப்பட்ட வரிகள். அதற்கு முன்னர் ‘பழம் எனக்கு கொட்ட உனக்கு... மாம்பழம் எனக்கு மாங்கொட்டை உனக்கு’ என்கிற வரிகள் இடம்பெற்று இருந்ததாம். இதை சென்சாரில் தூக்கிவிட்டனர்.

இதையும் படியுங்கள்... பாலியல் குற்றச்சாட்டு.. "சட்டம் உங்களுக்கு பதில் சொல்லும்" - கோபத்தில் சீரிய நிவின் பாலி!

Latest Videos

click me!