சுச்சி லீக்ஸால் கோலிவுட்டையே கதிகலங்க வைத்தவர்; யார் இந்த சுசித்ரா? அந்தரங்க விஷயங்களை அவிழ்த்துவிட்டது ஏன்?

First Published | Sep 4, 2024, 12:57 PM IST

Suchi Leaks Suchitra Allegations : மலையாள திரையுலகை ஹேமா கமிட்டி அறிக்கை புரட்டிப்போட்டுள்ளதை போல் சுச்சி லீக்ஸால் கோலிவுட்டையே கதிகலங்க வைத்தவர் தான் சுசித்ரா.

Suchitra

ஆல் இந்தியா ரேடியோ மட்டும் ஒருகாலத்தில் அனைவரின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. ஆனால் டிவி சேனல்கள் அறிமுகமான பின்னர் ஆல் இந்தியா ரேடியோ டம்மி ஆனது. அதன்பின்னர் தனியார் ரேடியோ சேனல்கள் தொடங்கி படிப்படியாக கோலோச்ச தொடங்கின. அந்த காலகட்டத்தில் மக்களின் மனம் கவர்ந்த ஆர்.ஜே.வாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. இவர் கடந்த 2003-ம் ஆண்டு ஆர்.ஜே.வாக ரேடியோ சேனலில் பணியாற்ற தொடங்கினார்.

முதலில் ரேடியோவில் தயாரிப்பாளராக வேலைக்கு சேர்ந்த சுசித்ராவின் குரல் தனித்துவமாக இருந்ததால் அவரை முதலில் காதல் சம்பந்தமான ஷோ பண்ண வைத்திருக்கிறார்கள் அது பேமஸ் ஆனதால், ரேடியோ மிர்ச்சியில் காலையில் ஹலோ சென்னை என்கிற நிகழ்ச்சியை சுச்சித்ரா தொகுத்து வழங்கினார். அதில் அப்போது டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய விஷயங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பற்றி அந்த நிகழ்ச்சியில் பேசுவார் சுச்சி.

அந்த காலகட்டத்தில் இண்டர்நெட் பயன்பாடு பெரியளவில் இல்லாததால் சுச்சியின் நிகழ்ச்சி தான் நாட்டுநடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வந்தது. ரேடியோவில் சுச்சியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. வெறும் 22 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த சுசித்ரா, ஒரே வருடத்தில் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதால் அவருக்கு ஒரு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதுவும் 2004-05 காலகட்டத்திலேயே ரேடியோவில் பேசி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார் சுச்சி.

Singer Suchitra, Karthik Kumar

எப்படி சினிமாவில் ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் முதன்முதலில் 1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்கிற புகழைப் பெற்றாரோ. அதேபோல் ரேடியோவில் முதன்முதலில் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஆர்.ஜே என்றால் அது சுசித்ரா தானாம். இதையடுத்து 2005-ம் ஆண்டு 2 லட்சம் சம்பளத்துடன் ரேடியோ ஒன் சேனலில் ஆஃபர் கிடைக்க அதில் வேலைக்கு சேர்ந்துள்ளார் சுச்சி. அதேபோல் ஹலோ எஃப் எம் ரேடியோவிலில் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார் சுச்சி.

ரேடியோவில் வேலை பார்க்கும் போதே சிம்புவுடன் சேர்ந்து மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலை பாடினார் சுச்சி. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து கந்தசாமி, போக்கிரி போன்ற படங்களில் பாடினார் சுச்சி. அதுமட்டுமின்றி கந்தசாமி படத்தில் ஸ்ரேயாவுக்கு டப்பிங் கொடுத்ததும் சுசித்ரா தான். இப்படி ஆர்.ஜே.வாக மட்டுமின்றி பாடகியாகவும் உச்சத்தில் இருந்தார் சுசித்ரா. இதுதவிர ஸ்டேஜ் ஷோக்களையும் பண்ணியுள்ளார் சுசித்ரா, அதற்காக ஒரு ஷோவுக்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.

இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோட்!!

Tap to resize

Suchi Leaks

இப்படி உச்சத்தில் இருந்த சுசித்ராவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது சுச்சி லீக்ஸ். 4 லட்சம் பாலோவர்களை கொண்ட அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து கோலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கசியவிடப்பட்டன. இதனால் சில மாதங்கள் பரபரப்பாக பேசப்பட்ட அவர் பின் ஆள் அட்ரஸே தெரியாமல் போனார். பின்னர் பிக்பாஸில் கலந்துகொண்டார். மீண்டும் ஆர்.ஜே.வாக பணியாற்ற தொடங்கி சாத்தான்குளம் விவகாரம் பற்றியும் ஆங்கிலத்தில் இவர் பேசி வெளியிட்ட வீடியோ மிகவும் வைரல் ஆனது.

சுசித்ராவின் முதல் கணவர் பெயர் கார்த்திக் குமார். இவர் யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்துள்ள இவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் திருமணமான போதில் இருந்தே கருத்து வேறுபாடுடன் தான் இருந்திருக்கிறார்கள். திருமணமான 2வது ஆண்டே கார்த்திக்கிற்கு பெண்ணைவிட ஆண்கள் தான் பிடிக்கும் என சுச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Suchi Leaks Suchitra

சினிமா பிரபலங்களுடன் கார்த்திக் குமார் கலந்துகொள்ளும் பார்ட்டி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என கூறும் சுச்சி, அதில் அவர்கள் பிராங்க் செய்து ஒருவரின் எமோஷனோடு விளையாடுவார்கள் என்றும் கூறி உள்ளார். குறிப்பாக அந்த பார்ட்டிகளில் த்ரிஷா என்ன விதமான டேர் கொடுத்தாலும் செய்துவிடுவாராம். அப்படி ஒருமுறை போதையில் இருக்கும்போது அவர்கள் விளையாட்டாக செய்த விஷயம் தான் சுச்சி லீக்ஸ் என்று சுசித்ரா கூறி இருக்கிறார். எனக்கே தெரியாம என்னுடைய ட்விட்டர் கணக்கில் அந்தரங்க புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டதாக சுசித்ரா கூறி உள்ளார்.

சுச்சி லீக்ஸ் மூலம் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, அனுயா போன்ற திரைப்பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க வைத்தன. பின்னர் கார்த்திக் குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் சுச்சி. அதன்பின்னர் அவர் சில ஆண்டுகள் மீடியா பக்கமே தலைகாட்டவில்லை. பின்னர் பிக்பாஸ் மூலம் கம்பேக் கொடுத்த அவர், அடுத்தடுத்து யூடியூப்பில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

Suchitra Allegations

அதுவும் சமீப கலமாக அவர் அளிக்கும் பேட்டிகளில் விஜய் தொடங்கி திரிஷா, கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்களை பற்றி பல்வேறு அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுவும் கமல்ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் தாம்புல தட்டில் வைத்து போதைப்பொருள் பரிமாறப்பட்டதாக கூறி இருந்தார் சுச்சி. இந்த நிலையில், சமீபத்தில் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின் அங்கு நடக்கும் பாலியல் சீண்டல்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

இதைப்பற்றி சமீபத்தில் பேசிய சுசித்ரா, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் சிலர் சேர்ந்து தான் ஹேமா கமிட்டி விஷயத்தை ஊதி பெரிதாக்குவதாகவும், பகத் பாசில் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களின் கெரியரை அழிக்கதான் இவ்வாறு செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார் சுச்சி. அவரின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மலையாள நடிகை ரீமா கல்லீகல், சுசித்ராவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்... கோலிவுட்டில் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளாரா?

Latest Videos

click me!