Published : Sep 04, 2024, 03:21 PM ISTUpdated : Sep 04, 2024, 03:50 PM IST
India's Biggest Flop Movie : ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படம் பற்றி பார்க்கலாம்.
ஒவ்வொரு நடிகரும்.. தனது படம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். இயக்குனர் தயாரிப்பாளர்களும் அதையே மனதில் வைத்து தான் படத்தை எடுப்பார்கள், அதற்காக உயிரைக் கொடுத்து உழைக்கக்கூடிய நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள். படத்திற்காக அவர்கள் செய்த முதலீட்டில் இரு மடங்கு லாபம் கிடைக்க வேண்டும் என்கிற முனைப்பில் தான் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கிறார்கள். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது போல் படத்தை பார்த்து பார்த்து ரிலீஸ் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில் ஒரு படம் எவ்வளவு நன்றாக எடுக்கப்பட்டாலும்.. அது தோல்வியடைந்துவிடும்.
25
The Lady Killer
அப்படி ஒரு படத்தை பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். ரூ.45 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே வசூலித்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... நீங்கள் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அந்தப் படத்தின் பெயர் தி லேடி கில்லர். இப்படம் வெறும் ஒரு லட்சம் மட்டுமே வசூலித்தது. ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் வெறும் ஆயிரத்துக்கும் குறைவான டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆனது. பாலிவுட்டில் மிகப்பெரிய தோல்வி படமாக இது உள்ளது.
அஜய் பெல் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் படமான இதில் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பூமி பெட்னேகர் நடித்திருந்தார். இந்தப் படம் தயாரிப்புப் பணிகளின்போதே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. இறுதியாக நவம்பர் 2023 இல் வெளியிடப்பட்டது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாகவே வசூலித்தது.
லேடி கில்லர் சில திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. இந்தப் படத்திற்கு முதல் நாளில் வெறும் 293 டிக்கெட்டுக மட்டுமே விற்பனையானது. அதிலிருந்து ரூ.38,000 மட்டுமே வசூலாகியுள்ளது. சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தின் மொத்த வசூல் ரூ.1 லட்சத்தை தாண்டவில்லை.
45
The LadyKiller Box Office
லேடி கில்லர் தயாரிப்பாளர்கள் ரிலீசுக்கு முன்பே ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்தனர். ஊடக அறிக்கைகளின்படி, இந்தப் படம் டிசம்பர் இறுதியில் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டது. நேரடி ஓடிடி வெளியீட்டைத் தவிர்க்கும் ஒப்பந்தத்தின் காரணமாக, படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தப் படம் 4-6 வார திரையரங்கு வெளியீட்டுக்கு நவம்பர் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது,
டிஜிட்டல் உரிமைகள் மூலம் வசூல் முக்கியம் என்பதால், முழுமையடையாத படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். இந்த விஷயம் இயக்குனருக்கு கூட தெரியாது என்று அப்போது சர்ச்சை எழுந்தது.
55
The LadyKiller Disaster in Box Office
ஆனால் சோகம் என்னவென்றால், படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த பிறகு, ஓடிடி தளம் ஓடிடி வெளியீட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. படம் முழுமையடையாமல் திரையரங்குகளில் வெளியானதால் டிஜிட்டல் வெளியீடும் கடினமாகியது. இதுவரை லேடி கில்லர் திரைப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. மொத்தத்தில் இப்படம் மிகப்பெரிய தோல்வி படம் என்கிற பெயரை எடுத்துள்ளது.