அப்போதே கணித்த பயில்வான் ரங்கநாதன்..விமர்சனங்களுக்கு உள்ளாகும் நயன்தாரா விவகாரம்

First Published | Oct 10, 2022, 7:23 PM IST

அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. சம்பாதிக்கும் ஆசையில் அவர் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் என பயில்வான் கூறியிருந்தார்.

nayanthara - vignesh shivan

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு காதல் முதல் குழந்தை வரை அனைத்திலும் சிக்கல் தான் எழுந்து வருகிறது. முன்னதாக பல காதல் சர்ச்சைகளில் சிக்கி இறுதியாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார். இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. ஷாருக்கான், அனிருத், மணிரத்தினம், சூப்பர் ஸ்டார் என பிரபலங்கள் பலரும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். 

nayanthara - vignesh shivan

பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தை அடுத்து தாய்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு இவர்கள் ஹனிமூன் சென்றிருந்த போட்டோக்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்த 4 மாதங்களில் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறி உள்ளதாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று புகைப்படத்துடன் தெரிவித்து இருந்தனர்.  இவர்களுக்கு ஒருபுறம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் மறுபுறம் பல விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது.

Tap to resize

nayanthara

இந்தியாவை பொறுத்தவரை வாடகை தாய் கலாச்சாரம் பெருகிவிட்டதால் அதற்கான விதிமுறைகள் கூட ஏற்கனவே  நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதாவது திருமணம் ஆகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தம்பதியில் ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவராக இருக்க வேண்டும். வாடகை தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். ஒரு பெண் ஒரு முறை தான் வாடகை தாயாக இருக்க முடியும். நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகை தாயாக இருக்க வேண்டும். தம்பதிக்கு வாடகை தாய்க்கும் தகுதி சான்றிதழ் கட்டாயம் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

nayanthara - vignesh shivan

இந்த நிலையில்  4 மாதத்தில் குழந்தை பெற்றதால் சிக்கலில் மாற்றியுள்ளனர் நயன் - விக்கி. இது ஒருபுறம் இருக்க, நடிகைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் பயில்வான் ரங்கநாதன்,  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து பேசி இருந்த வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. 

nayanthara - vignesh shivan

அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் செய்து கொண்டாலும் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார். ஏனெனில் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. சம்பாதிக்கும் ஆசையில் அவர் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் என பயில்வான் கூறியிருந்தார்.  இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி, ஏற்கனவே கணித்த பயில்வான் ரங்கநாதன் என்ற பெயரில் ட்ரெண்டாகி வருகிறது.

Latest Videos

click me!