மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைக்கு வந்த பிறகு ஹிந்து மதம் குறித்த கேள்விகள் அதிகமாக எழுந்து வருகிறது. ராஜ ராஜ சோழன் இந்து அரசன் அல்ல, அவர் இந்து அரசனாக சித்தரிக்கப்படுகிறார் என பலரும் விமர்சித்து வருகின்றன. அதற்கு எதிர் தரப்பில் இருந்தும் பல விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.
Netflix, rajamouli
இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த ராஜமவுலி இது குறித்து அமெரிக்காவில் தன் கருத்தை தெரிவித்துள்ளார். ஆர் ஆர் ஆர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படம் ஆஸ்கார் விருது போட்டியில் பல பிரிவுகளின் கீழ் போட்டியிடுகிறது.
இதற்காக படம் பற்றிய நிகழ்வுகளில் ராஜமவுலி கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவ்வாறு கலந்தாய்வு கூட்டம் ஒன்றில், ஆர் ஆர் ஆர் இந்து மதத்தை உயர்த்திப் பிடிக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு ராஜமவுலி அளித்த பதிலில், ஹிந்து என்பது மதம் அல்ல அது ஒரு தர்மம் இன்றைய காலகட்டத்தில் தான் அது மதமாக்கப்பட்டது. ஹிந்து மதத்திற்கு முன்பு அது ஹிந்து தர்மமாகத்தான் இருந்தது.
ஹிந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை அது ஒரு தத்துவம், மதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹிந்து மதம் என்று பார்த்தால் நான் இந்து அல்ல அதே சமயம் ஹிந்து தர்மம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர ஹிந்து தான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல நூற்றாண்டுகள் மற்றும் யூகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் அதனால் வரும் முடிவுகள் குறித்தும் கவலைப்பட வேண்டாம் என்பதையும் ஹிந்து தர்மம் போதிக்கிறது. எனவே நான் இந்து தர்மத்தை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார்.