நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இதுவரை 61 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெற்றி தோல்வி என சரிசமமாக பார்த்திருக்கிறார் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கிய இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக வெளியாகி வேறலெவல் ஹிட் ஆனது. இதையடுத்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அஜித்.
நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. பின்னர் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... அனுமன் ஜெயந்திக்காக ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் - பிரபாஸ் வேறலெவல்ல இருக்காரே..!
நடிகர் அஜித், சினிமாவைப் போல் ரேஸிங்கிலும் அதீத ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கார் ரேஸில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளையும் வென்று இருக்கிறார். அஜித்தின் கெரியர் ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்ததற்கு அவர் ரேஸிங்கில் கலந்துகொண்டதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கார் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால் அவர் ரேஸிங்கில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்டு சினிமாவில் மட்டும் நடிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், அஜித் கார் ரேஸிங்கில் பங்கேற்காததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதன்படி அஜித்துக்கு ரேஸிங்கில் பங்கேற்க ஸ்பான்சர் யாரும் கிடைக்காத காரணத்தால் தான் அவர் அதில் இருந்து விலகிவிட்டதாக பயில்வான் கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள், அஜித் உடல்நலம் கருதியும் ரசிகர்களுக்காகவும் தான் ரேஸிங்கில் இருந்து விலகினாரே தவிர ஸ்பான்ஸர் கிடைக்கவில்லை என்று சொல்வதெல்லாம் வெறும் உருட்டு என பயில்வானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Nayanthara : போட்டோ எடுத்தா போனை உடைச்சிடுவேன்... ரசிகரிடம் கடிந்துகொண்ட நயன்தாரா