நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்றார். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்தை அடுத்த வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். அப்போது நயன்தாரா அங்கு வருவது தெரிந்ததும் அப்பகுதி மக்கள் அந்த கோவிலில் சூழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதேபோல் நயன்தாராவை வீடியோ எடுக்க செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் வந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் விக்னேஷ் சிவன் அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் நயன்தாராவும் வந்து, ப்ளீஸ் தயவு செஞ்சு சாமி கும்பிட விடுங்க என வேண்டுகோள் விடுத்தார். அதன்பின் இருவரும் சாமிதரிசனம் செய்தனர்.
இதையடுத்து காரில் திருச்சி சென்ற நயன்தாரா, அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி ரெயில் நிலையம் வந்திருந்தார். அப்போது அவர் அங்கு வந்திருப்பது தெரிந்ததும் அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்கத் தொடங்கினர். பின்னர் அவர்களை போலீசார் பத்திரமாக அழைத்துச் சென்று ரெயிலில் ஏற்றிவிட்டனர்.