
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை இரண்டு வாரங்களை கடந்தும், தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்... தற்போது பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் என்கிற youtube சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில், ஜெயம் ரவியுடன் பேசிய போது அவர் கூறிய பல பகீர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பயில்வான் ரங்கநாதன், காந்தராஜ் போன்றவர்கள் எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி சில தகவல்களை கூறி வருவதாக புகார் கொடுத்துள்ள நிலையில், பயில்வான் ரங்கநாதன் எதையும் ஆதாரம் இன்றி பேசவில்லை என்றும், எனக்கு தெரிந்ததை.. அறிந்ததை.. தான் பேசுகிறேன் என ஆணித்தனமாக தன்னுடைய பேட்டிகளில் கூறி வருகிறார். அந்த வகையில், தற்போது இதுவரை வெளிவராத ஜெயம் ரவி குறித்த பல தகவல்களை அண்மையில் கொடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
ஜெயம் ரவி பல விஷயங்களை சொல்ல மறுப்பதாகவும், இதே போல் பல சம்பவங்கள் நடந்திருப்பதாகவும்... அதனால் அவர் எதையும் விளக்கமாக சொல்லவில்லை. என்னுடைய மகன்களுக்கு எந்த ஒரு விஷயமும் தெரிந்து விடக்கூடாது. அவர்களுடைய நல்வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் என்றும், இதன் காரணமாகவே மனைவி ஆர்த்தியை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என சொல்கிறார். ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து பெற்று பிரிந்தால் கூட அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இவர்தானே அம்மா. அம்மா பெயரில் குற்றம் சொன்னால் அது பிள்ளைகள் மனதை நோகடிக்கும் விதத்தில் இருக்கும். எனவே எதையும் வெளிப்படையாக பேச முடியாத சூழலில் ஜெயம் ரவி உள்ளார்.
இயக்குனர் பாலாவையே கதறி அழ வைத்த... 'வாழை' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஏற்கனவே தனுஷ் உடன் நெருக்கமாக ஆர்த்தி பேசியபோது ஜெயம் ரவிக்கும், தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் ஜெயம் ரவி - ஆர்த்தி இருவருமே சமாதானம் ஆகிவிட்டார். எனவே இந்த பிரச்சனை வெளியே வந்தாலும் கூட, பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் போனது. இதன் பின்னர் ஜெயம் ரவியின் உத்தரவின்றி, பப்புக்கு போவது, மது குடிப்பது, பாங்காங், தாய்லாந்து, போன்ற பெரு நகரங்களுக்கு கணவரின் எந்த ஒரு அனுமதியும் இன்றி செல்வதை ஆர்த்தி வழக்கமாக வைத்திருந்தார். அனுமதி கூட பெற தேவையில்லை... கணவரிடம் ஒரு வார்த்தை கூறிவிட்டு செல்ல வேண்டும் என்கிற கர்டசியாவது இருக்க வேண்டும் அல்லவா? அதை கூட அவர் செய்யவில்லை.
பிரதர் ஆடியோ லாஞ்சுக்கு கூட ஜெயம் ரவி வாடகை காரில் தான் வந்தாரா? என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன், அது முற்றிலும் உண்மைதான். ஜெயம் ரவிக்கு சொந்தமாக அடையாறில் ஒரு பிளாட் இருக்கிறது. அது அவர் பெயரில் தான் இருக்கிறது. அங்கிருந்து தான் எனக்கு பேட்டி கொடுத்தார். மற்றபடி அவர் சம்பாதித்த பணம் முழுவதும் அவருடைய மாமியார் மற்றும் மனைவி ஆர்த்தியிடம் தான் உள்ளது என அவரே சொல்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட ஆர்த்தி முடக்கி விட்டதாக ஜெயம் ரவி கூறினார். அதேபோல் செக் புக், கார், உள்ளிட்ட அனைத்து உடைமைகளும் ஆர்த்தியிடம் தான் உள்ளது.
ஜெயம் ரவி தன்னுடைய தந்தையிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறியபோது, நீ விருப்பப்படுவதை செய் என கூறினார். இதன் பின்னர் தான் இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதே, தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார், தந்தையிடம் வந்து பேசினார். இதன் பின்னர் என்னுடைய தரப்பில் இருந்து என் தந்தை எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. மெளனமாக அங்கிருந்து சென்று விட்டார் என ஜெயம் ரவி கூறினார்.
மாலத்தீவுக்கு கும்பிடு போட்டுட்டு... லச்சத்தீவு பக்கம் செல்லும் பிரபலங்கள் ஏன் தெரியுமா?
தொடர்ந்து பேசி பயில்வான் ஏற்கனவே விவாகரத்து குறித்த பிரச்சனை இரு தரப்பிலும் இருந்து வந்தது. ஆனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர் சுஜாதா மற்றும் ஆர்த்தி தரப்பில் தங்களுக்கு எதுவுமே தெரியாது என கூறுவது முழுக்க முழுக்க பொய். அதேபோல் ஆர்த்தி தரப்பில் இருந்து ஜெயம் ரவியுடன் பேச முயன்றதாக கூறுவதில் உண்மை இல்லை என்றாலும், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பின்னர் சமாதானத்திற்கு ஆர்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி தரப்பில் இருந்து, ஆர்த்தியை பற்றி ஒரு வார்த்தை கூட தவறுதலாக குறிப்பிடவில்லை. தன்னிடம் பேசிய போது கூட ஆர்த்தி நல்லவர் தான் ஆனால் தன்னுடைய மாமியார் சுஜாதா தான் கொடுமைகாரர்... என கூறினார். தன்னுடைய சினிமா கேரியரை அழிக்க வேண்டும் என முயல்கிறார். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் சினிமா கேரியரில் முன்னேறினேன் என்பது எனக்கு தான் தெரியும் அதை அவ்வளவு எளிதில் அழிக்க விடமாட்டேன் என ஜெயம் ரவி கூறியதாக இந்த பேட்டியில் பயில்வான் பேசியுள்ளார்.