பாக்ஸ் ஆபிஸில் பாகுபலியாக திகழும் நடிகர் பிரபாஸ்! இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

First Published | Sep 26, 2024, 11:42 AM IST

Prabhas Net Worth : பான் இந்தியா நாயகனாக வலம் வரும் நடிகர் பிரபாஸின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Prabhas

தெலுங்கில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த ஈஸ்வர் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பிரபாஸ். இப்படம் சரிவர ஓடாவிட்டாலும் கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த வர்ஷம் திரைப்படம் பிரபாஸுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் தான் பின் தமிழில் மழை என்கிற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

வர்ஷம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய சத்ரபதி படத்தில் நடித்தார் பிரபாஸ். அப்படமும் மாஸ் வெற்றியை ருசித்தது. பின்னர் அஜித்தின் பில்லா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்தார். அப்படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படி தொடர்ந்து தெலுங்கு மொழி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பிரபாஸை தனது பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக்கி அழகு பார்த்தார் இயக்குனர் ராஜமவுலி.

Rebel Star Prabhas

பாகுபலி படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்தும் பான் இந்தியா படங்களாகவே உருவாக்கப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாகுபலி வெற்றிக்கு பின் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அந்த தோல்வியில் இருந்து பிரபாஸை மீட்டெடுத்த படம் சலார். கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய அப்படம் கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்தது.

சலார் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்த படம் கல்கி. இப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்திருந்தார் பிரபாஸ். இப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸீல் ரூ,1200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. சலார் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஸ்பிரிட், ராஜாசாப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இதையும் படியுங்கள்... கவிஞர் வாலியை 3 நாட்கள் கடத்திச் சென்று... கமல்ஹாசன் வாங்கிய பிளாக்பஸ்டர் ஹிட் பாட்டு!!


Prabhas Net Worth

இப்படி பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸின் சொத்து மதிப்பு பாகுபலிக்கு முன்னர் வரை ரூ.124 கோடியாக இருந்தது. ஆனால் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், சொத்து மதிப்பும் டபுள் மடங்கு உயர்ந்திருக்கிறது. தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.241 கோடியாக உள்ளது.

பிரபாஸ் இதுவரை அதிகபட்சமாக ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். ராதே ஷியாம் படத்துக்காக ரூ.120 கோடியும், ஆதி புருஷ் படத்துக்காக ரூ.150 கோடியும் வாங்கிய பிரபாஸ் அப்படங்களின் படுதோல்விக்கு பின் தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக குறைத்துக் கொண்டார். கடைசியாக அவர் நடித்த கல்கி படத்துக்காக அவருக்கு ரூ.80 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

Prabhas Salary

பிரபாஸுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சுமார் 84 ஏக்கர் பரப்பளவில் ஒரு சொகுசு பங்களா உள்ளது. அதன் மதிப்பு ரூ.60 கோடி இருக்குமாம். அந்த வீச்சில் நீச்சல் குளம், ஜிம் என சகலவசதிகளும் நிரம்பி இருக்கிறதாம். இதுதவிர இத்தாலியிலும் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் பிரபாஸ். அந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ள அவர், அதற்கு மாதம் 40 லட்சம் வாடகையும் வாங்கி வருகிறார்.

கார்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவராக இருக்கும் பிரபாஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரூ.60 லட்சம் மதிப்பிலான ஆடி ஏ6, ரூ.2 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள ஜாகுவார், ரூ.8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ரூ.5.8 கோடி மதிப்புள்ள லம்போகினி போன்ற சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... கொட்டுக்காளி முதல் டிமாண்டி காலனி 2 வரை... இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸா?

Latest Videos

click me!