கவிஞர் வாலி - இளையராஜா கூட்டணியில் பல வெற்றி பாடல்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் கமல் படத்துக்காக இவர்கள் கொடுத்த ஒரு ஹிட் சாங்கின் பின்னணி பற்றி பார்க்கலாம்.
அன்னக்கிளி படம் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இளையராஜா, 45 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசை ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். இன்றைக்கு டாப் இசையமைப்பாளர்களாக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோருக்கு போட்டியாக 80 வயதிலும் கெத்தாக இசையமைத்து வருகிறார் இளையராஜா. இவரது இசையமைத்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.
25
Ilaiyaraaja
இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியாக எந்த இசையமைப்பாளரும் இல்லாவிட்டாலும், தனக்கு தானே போட்டியாக கருதிக்கொண்டு அவர் இசையமைத்து இருக்கிறார். அதுவே அவரது பாடல்கள் வெற்றியடைய முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அதிலும் கமல்ஹாசனுடன் இளையராஜா கூட்டணி அமைத்தால் அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றிபெறும் என சொல்லும் அளவுக்கு ஒரு சக்சஸ்புல் காம்போவாக அவர்கள் திகழ்ந்து வந்துள்ளனர்.
அந்த வகையில், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை ஒன்றும் ஒளிந்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம். கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசன் இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை அனைத்தையும் வாலி எழுதி இருந்தார்.
45
Apoorva Sagodharargal
அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் இளையராஜா ஓகே செய்த பின்னர் பாடல் பதிவு நடப்பதை கவனித்த கமல்ஹாசன், என்ன இவரே ஓகே செய்கிறார். நாமும் வாலியிடம் பாட்டு வாங்கலாம் என முடிவு செய்து, கவிஞரை மூன்று நாட்கள் கடத்திச் சென்று அவரிடம் பாடல் வரியை வாங்கி இருக்கிறார் கமல். 3 நாட்களுக்கு பின் 4 பல்லவி 8 சரணத்துடன் வந்த வாலி, தன் பாக்கெட்டி இருந்து பாடல் வரிகளுடன் கூடிய பேப்பரை எடுத்து போட்டிருகிறார்.
55
Raja Kaiya Vachaa song secret
அந்த பாடல் வரிகள் இளையராஜாவின் ட்யூனிக்கு மேட்ச் ஆக இருந்தாலும் அதில் பல்லவிக்கு இளையராஜா போட்ட ட்யூன் ஓப்பனாக இருக்க, வாலி அந்த பல்லவி வரிகளை முடிவது போல் எழுதி இருக்கிறார். உடனே ராஜா கைய வச்சா என்பது போல் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார் இளையராஜா. இதைக்கேட்ட வாலி, இதுவே நல்லா தான இருக்கு யூஸ் பண்ணிக்கோ என சொல்ல, ராஜானு வருவதால் எனக்காக நீங்க ஓகே செய்யவில்லையே என்று கேட்க, நீ பாப்புலர் ஆனவன்யா... உன் பெயரை பயன்படுத்தலேனா நான் வேஸ்ட் என சொல்லி அவர்கள் உருவாக்கிய பாடல் தான் ராஜா கைய வச்சா பாடல். அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.