தன்னுடைய காந்தக் குரலால் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் பாடி, பிரபலமானவர் சுசித்ரா. இவர் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் குமார் தனுஷின் நெருங்கிய நண்பர். இதன் காரணமாகவே இவருக்கு தனுஷ் - நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் குமார் சுசித்ரா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தாலும், இடையில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இருவருமே பிரியும் நிலை ஏற்பட்டது.