இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்க, பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு திரையில் பார்க்கும் போதே, பல ரசிகர்களை கோபப்படுத்தும் விதத்தில் தத்ரூபமாக இருந்தது. அதே போல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளையும் குவித்தது.