சினிமாவில் பிட்னஸ் என்பது மிக முக்கியம். உடல்தகுதி உடன் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கே இங்கு மவுசு அதிகம். சில நடிகைகள் உடல் எடை அதிகரித்துவிட்டால், அவர்கள் மார்க்கெட் இழந்துவிடுவார்கள். உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சினிமாவை விட்டு விலகிய நடிகைகள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களைப் போல இருந்து கடின உழைப்பால் உடல் எடையை குறைத்து மீண்டும் ஃபிட் ஆகி சினிமாவில் கம்பேக் கொடுத்த நடிகைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகனுக்கும் நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமண சமயத்தில் நடிகை மஞ்சிமா குண்டாக இருந்ததை சிலர் ட்ரோல் செய்தனர். அப்போது அந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்தார். பின்னர் அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டு தற்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்து மீண்டும் ஒல்லி ஆகி இருக்கிறார் மஞ்சிமா.
வரலட்சுமி
பிட்னஸுக்கு பெயர்பெற்றவர் நடிகர் சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி சினிமாவில் அறிமுகமான புதிதில் உடல் எடை அதிகரித்த வண்ணம் இருந்தார். இப்படியே போனால் சினிமாவில் நீடிக்க முடியாது என்பதை புரிந்துகொண்ட அவர், பின்னர் உடற்பயிற்சி, டயட் என இருந்து உடலெடையை சட்டென குறைத்து ஸ்லிம் ஆனார்.
கல்யாணி பிரியதர்ஷன்
மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி, சினிமாவுக்கு வரும் முன்னர் செம்ம குண்டாக இருந்துள்ளார். சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால் ஸ்லிம் ஆக வேண்டும் என்பதை புரிந்துகொண்ட அவர், ஒல்லியான பின்னரே சினிமாவில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார்.
வித்யூலேகா ராமன்
காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் வித்யூலேகா ராமன். இவர் குண்டாக இருந்ததை கிண்டலடித்தே ஏராளமான படங்களில் காமெடி காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து திருமண சமயத்தில் ஒல்லியாக முடிவெடுத்த வித்யூலேகா 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனதும் பிகினி உடையில் போட்டோஷூட்டும் நடத்தினார்.