பின்னர் மணிரத்னம், வஸந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா போன்றவர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்துவின் இயக்குனர் கனவு கடந்த 2008-ம் ஆண்டு நனவானது. அவர் தமிழில் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் கண்ணும் கண்ணும். இப்படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதையை படமாக்கி இருந்தார் மாரிமுத்து. இப்படம் பெரியளவில் வெற்றியடைய வில்லை என்றாலும், அதில் இடம்பெற்ற பாடல்கள் வேறலெவல் ஹிட் அடித்தன.