விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்? என்ன தான் பிரச்சனை.. உண்மையை உடைத்த பயில்வான்!

First Published | Jul 24, 2023, 3:25 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில்... ரசிகர்கள் மனதை கவர்ந்த தொகுப்பாளினியாக இருக்கும், பிரியங்கா அவரின் கணவரிடம் இருந்து, பிரிந்து வாழ என்ன காரணம் என்பதை, பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருபவர் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில்... இவரை யாராவது கிண்டல் கேலி செய்தால் கூட, அதையும் செம்ம ஃபன்னாக மாற்றி விடுவார் பிரியங்கா. இதன் காரணமாகவே டிடிக்கு அடுத்த படியாக, பிரியங்காவுக்குக்கு தான் அதிக படியான ரசிகர்கள் உள்ளனர்.

பிரியங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு, விஜய் டிவி தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது பிரியங்கா - பிரவீன் பிரிந்து வாழ்ந்து வருவதற்கான காரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை ரேகா லெஸ்பியனா? பெண் செயலாளருடன் அந்தரங்க உறவில் இருந்தார்.! சுயசரிதையால் வெடித்த சர்ச்சை!

Tap to resize

பயில்வான் ரங்கங்கநாதன் பிரியங்கா குறித்து பேசியுள்ளதாவது, ஆரம்ப காலத்தில் பிரியங்கா தொகுப்பாளராக வாய்ப்பு தேடிய போது, பிரவீன் உதவியுடன் தான் விஜய் டிவி தொலைக்காட்சியின் உள்ளே வந்துள்ளார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும்... ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால், குறுகிய காலத்திலேயே தன்னுடைய கலகலப்பான பேச்சால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் பிரியங்கா.

முதலில் பிரவீனும் பிரியங்காவும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். இந்த காதல் திருமணத்திலும் முடிந்தது. திருமணமான சில வருடங்கள், இவர்களின் வாழ்க்கை நல்லபடியாக சென்றுகொண்டிருந்த நிலையில், பிரியங்காவின் வளர்ச்சியே இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் எழுவதற்கு காரணமாக அமைந்ததாம்.

டைவர்ஸ் ஆனாலும்.. அவரை இன்னும் லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்! ராமராஜன் மீதான தீராக்காதல் பற்றி மனம்திறந்த நளினி

சில நாட்கள் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், பிரியங்கா அவரின் அம்மா வீட்டில் தங்கியது... எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆக, பிரவீன் பிரியங்காவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். கணவருக்கு நம் மீதுள்ள கோபம் தனியட்டும் என்பதால் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாராம் பிரியங்கா. ஆனால் கணவர் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கு காரணம் தன்னுடைய கணவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருவதால், அவர் பெயரை பயன்படுத்த கூடாது என கூறி சப்பை கட்டு கட்டினார்.

ஆனால் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும், பிரவீன் கலந்து கொள்ளாதது இவர்களின் பிரிவை உறுதி செய்தது. பிரியங்கா பிரவீனுடன், வாழ்வதற்கு தயாராக இருந்தாலும்... பிரவீன் தான் வாழ மறுப்பதாகவும் கூறியுள்ளார் பயில்வான். 

2-வது குழந்தை பிறந்தாச்சு... மீண்டும் தந்தை ஆன குஷியில் பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுன் - குவியும் வாழ்த்துக்கள்

மேலும் தற்போது பிரியங்கா பொறுமை இழந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கும் பிரியங்காவின் கணவரிடம் இருந்து, இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லையாம். என்ன பிரச்சனை இருந்தாலும், அதனை மறந்து... மீண்டும், பிரவீன் பிரியங்காவுடன் சேர்ந்து வாழ்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!