காதலித்து திருமணம் செய்து கொண்ட கண்ணம்மா, தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து கொண்டிருந்த பாரதி, ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் DNA டெஸ்ட் எடுத்து பார்த்தபோது... லட்சுமி - ஹேமா இருவருமே தன்னுடைய குழந்தைகள் என நிரூபணம் ஆனதால் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.
இத்தனை நாள் நானே சொன்ன போது, என் வராத நம்பிக்கை, ஒரு பேப்பரை பார்த்ததும் வந்து விட்டதா என பாரதியுடன் வாழ முடியாது என கூறும் கண்ணம்மா, இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு, தன்னுடைய தந்தையுடன்... அவர் பிறந்து வளர்த்து பூர்வீக ஊருக்கு செல்கிறார். அங்கு உள்ள ஒரு பள்ளியில் இரண்டு குழந்தைகளையும் சேர்த்து... மீண்டும் தன்னுடைய இரு குழந்தைகளுக்காக உழைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.
இத்தனை வருடங்கள் கண்ணம்மா மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தது போதும்... நான் என் கண்ணம்மாவை தேடி செல்கிறேன் என, பாரதி தற்போது கையில் பையை வைத்து கொண்டு தெருத்தெருவாக சுற்றுகிறார். இவருக்கு துணையாக தற்போது, கணபதி கேரக்டர் நீண்ட நாட்களுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
விரைவில் பெற்றோராக போகும் பிரியா - அட்லீ ஜோடி
பல இடங்களில் தேடி பார்த்தும் கண்ணம்மா மற்றும் குழந்தைகள் கிடைக்காத நிலையில்... தன்னுடைய செல்போனுக்கு வந்த லொக்கேஷனை பார்த்து, கண்ணம்மா அவருடைய தந்தையின் பூர்வீக ஊரில் இருப்பதை அறிந்து அங்கு புறப்படுகிறார்.