தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்து பிரபலமானவர் தன்யா பாலகிருஷ்ணன். கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான, '7ஆம் அறிவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ராஜா ராணி' போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.
தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் தன்யா பாலகிருஷ்ணா, பிரபல தமிழ் இயக்குனர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து youtube பக்கத்தில் பேசியுள்ள கல்பிகா, 'தன்யா இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். ஒரு வருடம் ஆகியும் அதனை அதிகாரப்பூர்வமாக இருவருமே அறிவிக்கவில்லை என கல்பிகா கூறியுள்ளது, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.