இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு கீழே நின்று கமலஹாசன் புகைப்படம் எடுப்பது போல்... ஒரு புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சிலை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 1997 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாகும். இந்த சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கலைஞர், மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில், அந்த சிலையின் கீழ் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர், மகத்தான நினைவுகள், என பதிவித்துள்ளார். மேலும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.