'கண்ட நாள் முதல்' படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.
இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான 'தரமணி' மற்றும் 'வட சென்னை' ஆகிய படங்கள் இவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நேரத்தில் திடீர் என இரண்டு வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.
திருமணமான ஒரு பிரபலத்துடன் தவறான உறவு வைத்திருந்தேன், அந்த நபர் என்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார். நான் அப்போது செய்த தவறால், என் வாழ்க்கையே இருண்டு போனது. அதில் இருந்து வெளியே வர பல கவிதைகள் எழுதினேன். ஆதீத மன உளைச்சலுக்கு ஆளான நான், அதில் இருந்து விடுபட ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வளவு தகவலை சொன்ன அவர், அந்த நபர் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.
விரைவில் இவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள, பிசாசு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில்.. இதை தொடர்ந்து சுமார் 6 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். எனினும் இவர் உறவு வைத்திருந்த அந்த நபர் யார் என்பது குறித்த விவாதம் தான் சமூக வலைத்தளத்தில் பற்றி எரிந்து வருகிறது.