வேண்டிக்கொள்ளுங்கள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சகோதரருக்காக நடிகை குஷ்பு வேண்டுகோள்!

First Published | Dec 15, 2022, 11:40 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக, கொடிகட்டி பறந்த நடிகை குஷ்பு தன்னுடைய சகோதரருக்காக பிரார்த்தனை செய்யும்படி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை குஷ்பூ. 80பது மற்றும் 90களில், முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், போன்ற பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

மேலும் தமிழ் ரசிகர்களும் இவருக்கு கோவில் கட்டி இவரை கொண்டாடினர். தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்றாலும், சீரியல்,அரசியல், மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

25 ஆண்டுகளுக்கு பின் அதே நாள்... 'இந்தியன் 2' கெட்டப்பில் கமல் பகிர்ந்த அரிய புகைப்படம் வைரல்!

Tap to resize

குறிப்பாக கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ  துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவினார். எனினும் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை ரசிகர்களுக்காக வைத்துள்ளார்.

அதாவது நடிகை குஷ்புவின் மூத்த சகோதரருக்கு உடல் நலம் சரியில்லை என்றும், எனவே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு... கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவருடைய உடல் நலத்திற்கு அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குஷ்பூவின் சகோதரர் உடல்நல நிலை தற்போது சற்று முன்னேற்றம் அடைத்துள்ளதாகவும் அதற்க்கு காரணம், அனைவருடைய பிரார்த்தனை தான் என கூறியுள்ளார். 

திருமணமானவருடன் தகாத உறவு... உடல் அளவில் காயப்படுத்தினார்! முதல் முறையாக பிரபலம் மீது ஆண்ட்ரியா குற்றசாட்டு!

Latest Videos

click me!