Sita Ramam : அந்த ஒரு காரணத்துக்காக துல்கர் சல்மானின் ‘சீதாராமம்’ படத்திற்கு திடீரென தடை விதிப்பு

First Published Aug 5, 2022, 7:30 AM IST

Sita Ramam : ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் சீதா ராமம் படத்துக்கு திடீரென தடை விதிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நேரடியாக தெலுங்கில் நடித்துள்ள முதல் படம் சீதாராமம். ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

சீதாராமம் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்காக நடிகர் துல்கர் சல்மான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிரமாக புரமோஷன் செய்து வந்தார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் கலந்துகொண்டு, இப்படத்திற்கான முதல் டிக்கெட்டையும் அவரே வாங்கிக் கொண்டார். 

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் சர்ச்சை நடிகை? எப்போது துவங்குகிறது நிகழ்ச்சி... பரபரப்பு தகவல்!

தெலுங்கில் தயாராகி உள்ள இப்படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரபு நாடுகளில் மட்டும் இப்படம் ரிலீசாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்திற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது 2-வது முறையாக அவரது படத்திற்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. சீதாராமம் படத்தில் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகள் உள்ளதால் இப்படத்திற்கு கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஓமன் போன்ற அரபு நாடுகளில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள ரசிகர்கள் இப்படத்தை பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்த தோல்வி படம்... மளமளவென குறைந்த சூப்பர் ஸ்டார் சம்பளம்! வெளியான 'ஜெயிலர்' பட சம்பள விவகாரம்!

click me!