'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் ஹீரோயினாக நன்கு அறியப்பட்ட யாஷிகாவுக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
மேலும் தன்னுடைய ரசிகர்களுக்கும், இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ்க்கும் அவ்வப்போது கவர்ச்சி உடையில் தோன்றி தரிசனம் கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இதற்கிடையே அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்தது வரும் யாஷிகா கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அதில் இருந்து மறு உயிர் பிழைத்தார்.
சுமார் 8 மாதம் வரை, ஓய்வில் இருந்த யாஷிகா ஒருவழியாக விபத்தின் தாக்கத்தில் இருந்தும், அதனால் பட்ட காயங்களில் இருந்தும் மீண்டு, மீண்டும் தன்னுடைய பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
தற்போது சில படங்களில் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், யாஷிகா இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கையில் பூ கொத்து வைத்து கொண்டு, கருப்பு நிறம் மற்றும் ஸ்கின் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி பதறவைத்துள்ளார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.