சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்', நிகழ்ச்சி. வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 6-வைத்து சீசனை துவங்க நிகழ்ச்சியாளர்கள் தயாராகி உள்ளனர்.
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கடந்த ஒரு சில மாதங்களாக சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. பின்னர் திடீர் என சிம்புவை அண்ணா என கூப்பிட்டு அந்தர் பல்டி அடித்தார். அதே போல் தன்னுடைய தோழியான பிரபல சீரியல் நடிகை நட்சத்திரா பற்றியும் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீநிதி.
இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களில், மிகவும் டல்லாக சென்றது என்றால் அது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எனலாம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு டல்லாக சென்றதற்கு முக்கிய காரணம், இதில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் அதிகம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் இல்லை. எனவே சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்கள் தேர்வில் அதிக கவனம் காட்டி வருகிறார்களாம் நிகழ்ச்சியாளர்கள்.
அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளதாக சில உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.