கருப்பு வெள்ளை படங்களில் துவங்கி, தற்போதைய நியூ டெக்னோலஜி படங்களான 3டி படங்கள் வரை நடித்துள்ள நடிகர் என்கிற பெருமைக்கு உரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உலக அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் 71 வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படி தொடர்ந்து, அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால், 'அண்ணாத்த' படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட 'ஜெயிலர்' படத்திற்கு ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jailer
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பணிகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்குவதாக இருந்த நிலையில், ஆக்ஸ்ட் 1-ந் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், ஜெயில் பட ஷூட்டிங் திட்டமிட்டபடி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் ஷூட்டிங் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!