உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்த திரைப்படம் அவதார். இப்படம் ரிலீசாகி 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற இப்படம் உலகளவில் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது. டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான் இப்படத்தை இயக்கி இருந்தார்.
ஆங்கிலத்தில் தயாராகி உள்ள அவதார் 2 திரைப்படம், இந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. அவதார் 2 படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது.