பொங்கலுக்கு ரிலீசாக உள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு படங்களுக்கும் இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் விஜய், அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
24
துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமாரும் வெளியிட உள்ளார். இதனிடையே வாரிசு படத்திற்கு அதிக அளவில் தியேட்டர்கள் ஒதுக்க முடியாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் அப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்கிற குழப்பம் ஒரு பக்கம் நீடித்து வருகிறது.
மறுபக்கம், துணிவு படத்திற்காக தமிழகம் முழுவதும் தியேட்டர்களை புக் செய்யும் பணிகளில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அதிரடியாக களமிறங்கி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. அதுமட்டுமின்றி துணிவு படத்துக்காக அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
44
இவ்வாறு துணிவு மற்றும் வாரிசு படங்கள் பற்றி அடுத்தடுத்து பல்வேறு விதமான தகவல்கள் பரவி வந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டியில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பொங்கலுக்கு ரிலீசாக உள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு படங்களுக்கும் இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை என்பது உறுதியாகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.