மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் டிராப் ஆனதா! அறிவிப்பு வந்து 2 வருஷம் ஆகியும் ஷூட்டிங் ஆரம்பிக்காதது ஏன்?

First Published Nov 22, 2022, 10:16 AM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். கர்ணன் பட ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்திலேயே இதுகுறித்த அறிவிப்பும் வெளியானது.

கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பா.இரஞ்சித் தயாரித்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது.

இதையடுத்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இப்படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்தது. கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

கர்ணன் படத்தை முடித்ததும் துருவ் விக்ரம் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது மாமன்னன் படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து விட்ட நிலையில், அவர் அடுத்ததாக துருவ் விக்ரம் படத்தை தான் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்... நிர்வாகிகள் காலில் விழும் வீடியோவால் டென்ஷன் ஆன விஜய்... புஸ்ஸி ஆனந்தை நேரில் அழைத்து தளபதி கொடுத்த வார்னிங்!

ஆனால் தான் அடுத்ததாக கலையரசன் நடிக்கும் வாழை என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் மாரி செல்வராஜ். வாழை படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் நெட்டிசன்கள் பெரும்பாலானோர் எழுப்பிய ஒரே கேள்வி துருவ் விக்ரம் படம் என்ன ஆனது என்பது தான். சிலரோ அப்படத்தை மாரி செல்வராஜ் டிராப் பண்ணிவிட்டதாக வதந்திகளை பரப்பினர்.

ஆனால் உண்மையில் அப்படம் டிராப் ஆகவில்லையாம். வாழை படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் துருவ் விக்ரம் படத்தின் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மாரி செல்வராஜ். அது கபடி வீரரை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் அதற்கான பயிற்சியை துருவ் விக்ரம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சிங்கப்பூர் அதிபரின் இறுதிச் சடங்கில் ஒலித்த தேவாவின் பாட்டு... பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவலை சொன்ன ரஜினி

click me!