தற்போது வாரிசு படத்துக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், தன் பலத்தை காட்ட தான் விஜய் இப்படி ஒரு கூட்டத்தை நடத்தியதாகவும் ஒரு பக்கம் தகவல் பரவி வர, மறுபுறம் விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த், இந்த கூட்டத்தின் போது தன்னை வரவேற்க வந்த நிர்வாகிகளை தன் காலில் விழ வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுக்கும்பட்சத்தில் அவரிடம் சீட் வாங்குவதற்காக புஸ்ஸி ஆனந்தின் உதவியும் தேவைப்படும் என்பதால் நிர்வாகிகள் இவ்வாறு செய்ததாக் கூறப்பட்டது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்து நடிகர் விஜய் டென்ஷனாகிப் போனாராம். வீடியோ பார்த்த உடன் புஸ்ஸி ஆனந்தை நேரில் அழைத்து விஜய் வார்னிங் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்தவரை பிளான் போட்டு மாட்டிவிட்ட ஹவுஸ்மேட்ஸ்.. அப்போ இந்தவார எலிமினேஷன் இவரா?