தளபதி விஜய் தற்போது பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான, வம்சி இயக்கத்தில்... 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து ஏதேனும் அப்டேட் வருமா என? ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வது போல் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.
தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடல் ஒன்று பல்லாரியில் உள்ள அழகிய இடத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார். இது ஒரு ஸ்ட்ரெஸ் பாஸ்டரான பாடலாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை உறுதி செய்வது போல், சில மிருக பொம்மைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் இவர் பகிர்ந்துள்ளார். எனவே இந்த பாடலில் சில மிருகங்களும்.. இடம்பெற வாய்ப்புள்ளதை நம்மால் யூகிக்க முடிகிறது.
ராம் சரணின் யவடு மற்றும் மகேஷ் பாபு நடித்த மகரிஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி பைடிபள்ளி, விஜய்யை வைத்து குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த இந்த படத்தை இயக்கியுள்ளார். 'வாரிசு' படத்தின் திரைக்கதையை பைடிப்பள்ளி, ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் இணைந்து எழுதியுள்ளனர். இந்த இடத்தின் மூலம் முதல் முறையாக விஜய்க்கு ஹீரோயினாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சரத்குமார், பிரபு, குஷ்பூ, பிரகாஷ் ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.
17 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த 'சந்திரமுகி' பட நடிகை! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடுத்து கொண்ட செல்ஃபி!
தளபதி விஜய்யின் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் தமன். தில் ராஜு தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம், ஜனவரி மாதம்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜானி மாஸ்டரின் பதிவும், அவர் வெளியிட்டுள்ள வேடிக்கையான புகைப்படங்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.