நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இப்படங்களின் வெற்றிக்கு இவர்களது கெமிஸ்ட்ரியும் ஒரு முக்கிய காரணம். இப்படங்கள் ரிலீசுக்கு பின் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின.