பிரம்மாண்ட படங்களை இயக்கி உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருபவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் அவதார். கற்பனையின் உச்சமாக கருதப்படும் இப்படத்தின் மூலம் ரசிகர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார் ஜேம்ஸ் கேமரூன். உலகளவில் சக்கைப்போடு போட்ட இப்படம் அந்த சமயத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் 290 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து இருந்தது.
24
அவதார் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த ஜேம்ஸ் கேமரூன், அதற்கான பணிகளிலும் இறங்கினார். சுமார் 13 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் அவர் அவதார் 2 படத்தை எடுத்து முடித்தார். அப்படத்துக்கு அவதார் தி வே ஆஃப் வாட்டர் எனவும் பெயரிடப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
அவதார் படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல் அவதார் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காட்சியமைப்பில் பிரம்மிப்பூட்டினாலும் திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவதார் படத்தை விட குறைந்த அளவிலான வசூலையே அவதார் 2 குவித்தது. இப்படத்துக்கு 230 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைத்தது.
44
இந்நிலையில், அவதார் 2 திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் இன்று (மார்ச் 28) முதல் அமேசான் பிரைம் மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால் இனி வீட்டில் இருந்தபடியே ஜேம்ஸ் கேமரூனின் இந்த பிரம்மாண்ட படைப்பை பார்த்து ரசிக்கலாம். அவதார் 2 திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி 4 மாதங்களுக்கு பின் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.