வேறு வழியே இல்லாமல்... 'ராஜா ராணி 2' சீரியல் உள்ளே வந்த ஆஷா கவுடா! ரியாவை வெளியேற்ற காரணம் இது தான்!

First Published | Feb 23, 2023, 10:35 PM IST

'ராஜா ராணி 2' சீரியலில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் அதிரடியாக இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் வெளியேற்றப்பட என்ன காரணம்? என தற்போது தெரிய வந்துள்ளது.
 

விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'ராஜா ராணி 2' இந்த சீரியலை பிரவீன் பெனட் இயக்கி வந்த நிலையில், சமீபத்தில் இந்த தொடரை நான் இயக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து 'ராஜா ராணி 2' தொடரில், இருந்து ஆல்யா மானசா விலகிய பின்னர் கடந்த ஒரு வருடமாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீரென கடந்த வாரம் ராஜா ராணி 2 தொடரில் இருந்து தான் விலகி விட்டதாகவும், இனி தன்னுடைய கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என கூறி இவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

மயில்சாமி இறந்தபோது என்ன நடந்தது இது தான்..! தவறான தகவல்களால் வேதனையோடு பேசிய மகன்..!

Tap to resize

ரசிகர்கள் பலர் இந்த சீரியலை விட்டு அவர் விலக என்ன காரணம்? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், அது தனக்கே தெரியாது என பதிவிட்டு கம்யூனிகேஷன் பிரச்சனை என சீரியல் குழு தெரிவித்ததாக கூறியிருந்தார்.
 

 சீரியலின் நாயகிக்கே தெரியாமல் எப்படி நடிகையை மாற்ற முடியும் என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. 'ராஜா ராணி 2'  தொடர் 15 ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரை ஷூட்டிங் நடத்தப்படுமாம். இதையே சீரியல் குழுவினர் நிலையாக வைத்துள்ளனர். இந்த 15 நாட்களும் வெளியூரை சேர்ந்த நடிகைகள் என்றாலும் சென்னையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு ஷெட்யூல் பின்பற்றப்பட்டு வருகிறது.

தனுஷின் பெற்றோரை இப்படித்தான் நடத்தினார்களா ரஜினியின் குடும்பம்? வைராக்கியதோடு வீடு கட்டியதன் பின்னணி!
 

ஆனால் ரியா தன்னுடைய பர்சனல் விஷயங்களுக்காக ஷூட்டிங் நடைபெறும் தேதியில் வெளியூருக்கு செல்ல உள்ளதாக ஏற்கனவே சீரியல் குழுவிடம் அறிவித்துள்ளார். அப்போது ஒப்புக்கொண்ட சீரியல் குழு, கைவசம் எபிசோட் இல்லாத காரணத்தால்.. ரியா கூறிய நாட்களில் மீண்டும் ஷூட்டிங் வரும்படி அழைத்துள்ளனர்.
 

அவர் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை ரீச் செய்யமுடியவில்லை என கூறப்படுகிறது. எப்படியும் எபிசோடை கொடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்த சீரியல் குழு, வேறு வழியே இல்லாமல் அவசர அவசரமாக ஆஷா கௌடாவை 'ராஜா ராணி 2' சீரியலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். தன்னுடைய பர்சனல் விஷயங்களை முடித்துவிட்டு, ஷூட்டிங்கிற்கு வந்த ரியாவுக்கு கடைசியில் அதிர்ச்சி தான் காத்திருந்தது. 

லோ நெக் கவர்ச்சியில்.... கிழிந்த உடையில் அப்பட்டமாக அந்த இடத்தை காட்டி அனிகா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்!

தன்னுடைய கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை நடித்துக்கொண்டிருப்பது குறித்து சீரியல் குழுவிடம் கேட்டதற்கு, சிம்பிளாக கம்யூனிகேஷன் பிரச்சனை காரணமாக உங்களை சீரியலில் இருந்து தூக்கி விட்டதாக அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
 

Latest Videos

click me!