இயக்குனர் பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வந்த 'வணங்கான்' திரைப்படம், சில பல... பிரச்சினைகளாலும், மனஸ்தாபங்களாலும், சூர்யா கையை விட்டு நழுவ, அவரும் பாலா விட்டதே போதும் என அதிரடியாக படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. படம் ஒரு பக்கம் விறுவிறுப்பாக வளர்ந்து வந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் கடு கடுவென பாலா இருப்பது தான் அருண் விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சனை என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கூட அருண் விஜய் அதிகம் பேசும் சுபாவத்தை மாற்றிக்கொண்டு நொந்து கொண்டு தான் நடித்தார் என கூறப்படுகிறது. இப்படி கடந்து சென்ற நாட்கள் அவருக்கு ரணகளமாகவே சென்றுள்ளது... பாவம் பாலா படத்துக்கு ஆசை பட்ட அருண் விஜய்க்கு இந்த நிலையா? என விவரம் தெரிந்தவர்கள் பரிதாபத்தோடு கூறி வருகிறார்களாம். இப்படி பரவி வரும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.