தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அக்கா அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாளவிகா அவினாஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்ன காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்களிடம் யாராவது ஒற்றை தலைவலி என்று கூறினால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பாரம்பரிய மருந்துகள் என்று சிலவற்றை சொல்வார்கள் அதைக் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம். இது சாதாரண தலைவலி என்பதை விட, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இல்லையெனில் நீங்களும் என்னைப்போல் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடலாம் என்று ஷாக் கொடுத்துள்ளார்.
நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல் வீடியோ லீக் ஆனதால் ஷாக்!
இந்த புகைப்படத்தில் அவருடைய முகம் ஒரு பக்கம் வீங்கியது போல் இருக்கிறது. அதே போல் புகைப்படத்தில் மருத்துவ மனையின் உடையை உடையை மாளவிகா அவினாஷ் போட்டுள்ளார். இவரின் இந்த நிலையை கண்டு ரசிகர்கள், விரைவில் அவர் நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.