விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் பலரது திறமை வெளிப்பட்டு, இன்று அவர்கள் பல வாய்ப்புகளை பெற்ற பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில், பட்டிமன்ற பேச்சாளராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, பின்னர் ஸ்டண்ட் அப் காமெடியனாக அறியப்பட்டு, தற்போது திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. இவரது ஊரையும், இவர் பெயருடன் சேர்த்துள்ளதால் பலருக்கு இவரை அறந்தாங்கி நிஷா என்றால் தான் தெரியும்.
பல முறை சென்னைக்கு ஷிப்ட் ஆக வேண்டும் என கேட்டபோதெல்லாம் அவருடைய குடும்பத்தினர் அதற்க்கு ஒப்புக்கொள்ள வில்லை. ஆனால் ஒருவழியாக அடம் பிடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் சில விஜய் டிவி பிரபலங்கள் உள்ள, பிளாட்டிற்கே வந்துள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் பால் காய்ச்சும் போது தன்னுடைய வீட்டையும் அவர் சுற்றி காட்டியுள்ளார். இந்த வீடியோவை அவர் நடத்தி வரும் யூ டியூப் பக்கத்தில் வெளியிட அது, 4 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: நிஜ பெண்களே தோற்றுவிடுவார்கள்... 'பிக்பாஸ் ஜோடி 2' ஆண் போட்டியாளர்களின் அசர வைக்கும் லேடீஸ் கெட்டப்! போட்டோஸ்