மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே மவுசு இருந்துகொண்டு தான் இருக்கிறது. நயன்தாரா, அசின், கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் என ஏராளமான நடிகைகளுக்கு அடையாளம் கொடுத்தது தமிழ் சினிமா தான். ஆனால் சமீபத்தில் ஏராளமான இளம் மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா லட்சுமி
மலையாளத்தில் மாயநதி படம் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆக்ஷன் படம் மூலம் எண்ட்ரி கொடுத்த இவர் கடைசியாக நடித்த பொன்னியின் செல்வன் 1, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 2 ஆகிய மூன்று படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன.
அபர்ணா பாலமுரளி
மஹேஷிண்டே பரிஹாரம் என்கிற மலையாள படம் மூலம் பேமஸ் ஆனவர் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் 8 தோட்டக்கள் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை கொடுத்ததோடு, இப்படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.
லிஜோமோல் ஜோஸ்
மலையாளத்தில் இருந்து வந்து கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் மற்றொரு நடிகை என்றால் அது லிஜோ மோல் தான். இவர் சசி இயக்கிய சிகப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சூர்யா தயாரிப்பில் இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் அவரை பேமஸ் ஆக்கியது.
சம்யுக்தா மேனன்
அச்சு அசல் சமந்தாவை போல் இருப்பவர் தான் சம்யுக்தா மேனன். மலையாள நடிகையான இவருக்கும் தற்போது கோலிவுட்டில் செம்ம டிமாண்ட் இருக்கிறது. இதற்கு காரணம் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த வாத்தி படம் தான். அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் சம்யுக்தா.
ரெஜிஷா விஜயன்
ஜூன் என்கிற மலையாள படத்தில் நடித்து பிரபலமானவர் ரெஜிஷா. இவரை தமிழில் அறிமுகப்படுத்தியது மாரி செல்வராஜ் தான். அவர் இயக்கிய கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜிஷா. இதையடுத்து தமிழில் அவர் நடித்த ஜெய் பீம், சர்தார் ஆகிய படங்களும் வெற்றி பெற்றன.
அன்னா பென்
கும்பலங்கி நைட்ஸ் படத்தில் நடித்து பேமஸ் ஆனவர் அன்னா பென். இவர் தமிழில் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அன்னா பென்.