டிசம்பர் மாதம் 5-ந் தேதி முதல் லாக்டவுன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அதனை வேறு தேதிக்கு தள்ளிவைத்து உள்ளனர்.
லாக்டவுன் என்கிற சொல் கேட்டதும் மக்களிடையே ஒருவித பதற்றம் ஏற்படும். அதற்கு முக்கிய காரணம் கொரோனா ஊரடங்கு தான். ஆனால் தற்போது நாம் பார்க்க உள்ளது லாக்டவுன் திரைப்படத்தை பற்றிய அப்டேட். இப்படமும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் உருவாக்கி இருக்கிறார். இதில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கடைசி நேரத்தில் அப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
24
லாக்டவுன் ரிலீஸ் தள்ளிவைப்பு
லாக்டவுன் திரைப்படம் டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவித்துள்ள படக்குழு, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது வானிலை நிலவரம் மிக மோசமாக இருப்பதாலும், கனமழை பெய்து வருவதாலும் லாக்டவுன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். படம்பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், விரைவில் புது ரிலீஸ் தேதியுடன் சந்திப்போம் என்றும் லைகா நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
34
புது ரிலீஸ் தேதி என்ன?
லாக்டவுன் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட படக்குழு, அதன் புது ரிலீஸ் தேதியை வெளியிடவில்லை. அடுத்த வாரம் கார்த்தியின் வா வாத்தியார், அதற்கு அடுத்த வாரம் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு காத்திருப்பதால், அநேகமாக லாக்டவுன் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லாக்டவுன் திரைப்படத்தை ஏ.ஆர்.ஜீவா இயக்கி உள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் உடன் அபிராமி, ரேவதி, மாறன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சித்தார்த் விபின், என்.ஆர்.ரகுநந்தன் என இரு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு அனுபமா நடிப்பில் வெளியாக உள்ள மூன்றாவது படம் லாக்டவுன். இதற்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான டிராகன் மற்றும் பைசன் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.