தேம்பி அழுத சூர்யா... சோகத்தில் குமுறிய ரஜினி - ஏவிஎம் சரவணன் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

Published : Dec 04, 2025, 11:41 AM IST

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று காலை உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு நடிகர்கள் சூர்யா, ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

PREV
14
Tamil Cinema Celebrities Paid Last respect to AVM Saravanan

தமிழ்த்திரை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்து, பல வெற்றி திரைப்படங்களைத் தயாரித்து, தனக்கென தனி முத்திரை பதித்த, முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், அகில உலக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பதவி வகித்து, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஏவிஎம். சரவணன். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ஏவிஎம் சரவணன் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருவதோடு, நேரில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

24
முதல்வர் அஞ்சலி

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி அவர்குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.

பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள். அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

34
கண்ணீர் சிந்திய சூர்யா

அதேபோல் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நடிகர் சூர்யா, தன்னுடைய தந்தை சிவக்குமார் உடன் வந்து அஞ்சலி செலுத்தினார். ஏவிஎம் சரவணன் உடலை பார்த்ததும் சூர்யா தேம்பி அழுதார். சிவக்குமாரும் கண்ணீர் சிந்தினார். சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த அயன் திரைப்படத்தை தயாரித்தது ஏவிஎம் சரவணன் தான். அதுமட்டுமின்றி சிங்கம்புலி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த பேரழகன் படத்தையும் சரவணன் தயாரித்திருந்தார்..

44
அஞ்சலி செலுத்திய ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளது ஏவிஎம் நிறுவனம். இன்று காலை ஏவிஎம் சரவணன் மறைவுச் செய்தி கேட்டதும் மனமுடைந்து போன ரஜினிகாந்த், சோகமாக வந்து அஞ்சலி செலுத்தினார். ரஜினிகாந்துக்கு முரட்டுக்காளை தொடங்கி, எஜமான், சிவாஜி தி பாஸ் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories