சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காததால் அவனை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என முடிவெடுக்கிறார் விஜயா. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் அம்மா இறந்துவிட்டதாக கூறி அவனை மீனாவின் வீட்டில் விட்டுச் செல்கிறார் கிரிஷின் பாட்டி லட்சுமி. விஜயாவுக்கு கிரிஷ் இந்த வீட்டில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் கிரிஷை எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என முடிவெடுத்து சிந்தாமணியிடம் இது தொடர்பாக ஐடியா கேட்கிறார் விஜயா. அதற்கு அவர், அந்த பையனை வீட்டை விட்டு விரட்டுவதை விட அவனே இந்த வீட்டைவிட்டு போறேன்னு சொல்லனும், அதற்கு அவனுக்கு உங்கள் மீது பயம் வர வேண்டும். அது எப்படி வர வைப்பது என விஜயா கேட்கிறார்.
24
சிந்தாமணி கொடுக்கும் ஐடியா
அதற்கு சிந்தாமணி, அவன் வீட்டில் சின்னதா எதாவது சேட்டை செய்யும் போது நல்லா நாலு போடு போடுங்க, அதுவும் இல்லேனா, கரண்டியை நல்லா சூடு பண்ணி சூடு வச்சி விட்றுங்க என சொல்கிறார். இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரோகிணி, என்ன சொல்லிகிட்டு இருக்கீங்க நீங்க, இதெல்லாம் பண்ணினா அது சித்திரவதை ஆகிவிடும். இதுகுறித்து கிரிஷோட பாட்டி போலீஸில் புகார் கொடுத்தால், அவங்க உங்களை தான் கைது செய்வார்கள் என சொல்ல, விஜயாவும் பயந்துபோய், இந்த ஐடியாலாம் வேண்டாம். வேற ஏதாச்சும் சொல்லுங்க என சொல்கிறார்.
34
கிரிஷை கடத்த ஓகே சொன்ன விஜயா
பின்னர் யோசித்து, இன்னொரு ஐடியா இருப்பதாக சொல்லும் சிந்தாமணி, அந்த பையனுக்கு யாரும் இல்லாததால் தானே உங்கவீட்டில் விட்டிருக்காங்க, அவனை ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிடலாமா என சொல்கிறார். அதற்கு என்வீட்டில் இருக்குற யாரும் ஒத்துக்க மாட்டாங்க என சொல்கிறார் விஜயா. நீங்க எதுக்கு எல்லார்கிட்டயும் கேட்டுகிட்டு இருக்கீங்க, யாருக்கும் தெரியாம கிரிஷை கடத்திடலாம் என சொல்கிறார் சிந்தாமணி. என்னுடைய ஆட்களை வைத்து அவன் ஸ்கூலில் இருந்து வரும்போது தூக்க சொல்லிடுறேன். பின்னர் அவனை எங்காவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம் என சிந்தாமணி சொல்ல, அதற்கு இந்த ஐடியாவும் நல்லா இருக்கு என ஓகே சொல்கிறார் விஜயா.
இதையெல்லாம் தெரிந்துகொண்ட ரோகிணி, உடனடியாக மீனாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அவர் முத்துவிடம் கிரிஷை ஸ்கூலுக்கு சென்று அழைத்து வருமாறு கூறுகிறார். பின்னர் முத்து கிரிஷை அழைக்க சென்றபோது, அவனை வேறு ஒரு காரில் கடத்தி செல்வதை பார்த்துவிடுகிறார். அப்போது அந்த காரை சேஸ் பண்ணி செல்லும் முத்து, அவர்களை மடக்கிப் பிடித்து, கிரிஷை கடத்தி வைத்திருந்தவர்களை எல்லாம் அடித்துவிட்டு, கிரிஷை பத்திரமாக மீட்டுவிடுகிறார். இதன்பின் என்ன நடந்தது? கிரிஷை கடத்தியது யார் என்பதை முத்து கண்டுபிடித்தாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.