எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை போலீஸ் வலைவீசி தேடி வரும் நிலையில், அவர் சிக்கினாரா? தப்பித்தாரா? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய உண்மைகளை எல்லாம் ஜனனி, விசாலாட்சியிடம் சொன்னதை அடுத்து, தான் இத்தனை நாள் அவனை மலைபோல் நம்பி ஏமாந்துவிட்டேனே என குற்ற உணர்ச்சியால் கண்ணீர்விட்டு அழுததோடு, ரேணுமா மற்றும் ஜனனியிடம் மன்னிப்பு கேட்டார் விசாலாட்சி. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து போன் போட்டு பேசிய நந்தினி, ஈஸ்வரிக்கு இரண்டு, மூன்று முறை நினைவு திரும்பியதாகவும், ஆனால் குணசேகரன் டாக்டரை மிரட்டி அவருக்கு நினைவு திரும்பாதபடி செய்துவிட்டதாகவும் கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
சபதம் எடுக்கும் ஆதி குணசேகரன்
குணசேகரனை குண்டாஸில் கைது செய்ய போலீஸார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர் ஒரு பழைய வேன் ஒன்றில் தன்னுடைய தம்பிகளுடன் ஊரைவிட்டே ஓடி தலைமறைவாக சென்றுகொண்டிருக்கிறார். தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ஜனனியை பழிவாங்க வேண்டும் என்கிற வெறியோடு இருக்கும் ஆதி குணசேகரன், திரும்ப இந்த மதுரை மண்ணில் நான் காலடி எடுத்து வைக்கும் போது எனக்கு எதிரினு ஒரு புல்லு, பூண்டு கூட இருக்கக்கூடாது என சபதம் எடுக்கிறார். இதற்கு கதிர், ஞானம், கரிகாலன் ஆகியோரும் ஆமோதிக்கின்றனர்.
34
சக்தியை சந்திக்கும் ஜனனி
மறுபுறம் சக்தி உடல்நலம் தேறி, ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்ட விஷயம் அறிந்த ஜனனி, அவரை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து சொல்லும் ஜனனி, நாம் வீட்டில் இருந்து கிளம்பியதும் அனைவரையும் மிரட்டி, அன்புக்கரசிக்கும், தர்ஷனுக்கும் ஆதி குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி இருவரும் கல்யாண ஏற்பாடு செய்த விஷயத்தை சொல்லுகிறார். அதுமட்டுமின்றி, ஈஸ்வரியை ஆஸ்பத்தியில் வைத்து கொலை செய்ய முயன்றதையும், பணம் கேட்டு மிரட்டிய விஷயத்தையும் சக்தியிடம் சொல்லிவிடுகிறார் ஜனனி.
போலீஸுக்கு பயந்து ஊரைவிட்டே எஸ்கேப் ஆகும் ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகளை செல்லும் வழியில் ஒரு செக் போஸ்டில் போலீஸ் தடுத்து நிறுத்துகிறது. மஃப்டியில் இருக்கும் போலீஸ் இருவரும் ஏதோ போட்டோ வச்சு தான் விசாரிப்பதாக கரிகாலன் சொல்ல, அந்த போலீஸார் ஆதி குணசேகரனின் வேனை நோக்கி நடந்து வருகிறார். இதனால் அனைவரும் பதறிப்போகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனை போலீஸ் கைது செய்ததா? இல்லை போலீஸிடம் இருந்து சிக்காமல் ஆதி குணசேகரன் தப்பித்தாரா? என்பது இனி வரும் எபிசோடில் தான் தெரியவரும்.