பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷாரிக்குக்கு ஜோடியாக நடனமாடி, டைட்டில் பட்டதையும் தட்டி சென்றார். தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ள பிக்பாஸ் அனிதா, சமீபத்தில் விமலுக்கு தங்கையாக தெய்வ மச்சான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போனது.