தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். அந்த காலகட்டத்தில் இவர் நடித்த நாட்டாமை, சூரியவம்சம் போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடப்படும் கிளாசிக் ஹிட் படங்களாகும். காலத்திற்கு தகுந்தார் போல் படிப்படியாக ஹீரோ வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த சரத்குமார் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட விஜய்யின் வாரிசு மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, கஸ்டடி ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த சரத்குமார், ருத்ரன், படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸுக்கு வில்லனாகவும், கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுடனும் நடித்திருந்தார் சரத்குமார். கஸ்டடி படம் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீசாகி படு தோல்வியை சந்தித்தது.
இதையும் படியுங்கள்... சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி... விஜே அஞ்சனா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் வைரல்
நடிகர் சரத்குமார் சினிமாவை போல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அண்மையில் ஒரு அரசியல் கூட்டத்தில் பேசிய சரத்குமார், 60 வயதிற்கு மேலாகியும் 25 வயது வாலிபன் போல் இருக்கும் தனக்கு, 150 வயது வரை வாழ்வதற்கான டிரிக் தெரியும் என்றும், உங்களுக்கு அந்த ரகசியத்தை சொல்ல வேண்டும் என்றால் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னை ஜெயிக்க வைத்து முதல்வராக்குமாரும் பேசி இருந்தார். இது ஒருபுறம் வைரலாகி வருகிறது,
மறுபுறம் கஸ்டடி பட ஷூட்டிங் சமயத்தில் சரத்குமார் செய்த சேட்டைகள் பற்றி அப்படத்தில் அவருடன் பணியாற்றி உள்ள பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்துள்ளார். முதலில் அபிஷேக் பற்றி சரத்குமார் பேசுகையில், அவன் தங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கவே விடல என கூறினார். இதையடுத்து அபிஷேக், நீங்களும், நானும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நமீதாவின் அர்ஜுனா, அர்ஜுனா வீடியோ சாங்கை திரும்ப திரும்ப போட்டு பார்த்ததை சொல்லட்டுமா என கேட்டவுடன், ஷாக் ஆகிப்போன சரத்குமார், அப்படியே சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.