சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றியதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்றார் அஞ்சனா. இதையடுத்து படிப்படியாக சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா, தற்போது முன்னணி விஜே-வாக உயர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகள், ஆடியோ லாஞ்ச் போன்றவற்றை விஜே அஞ்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜே அஞ்சனாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகர் சந்திரன், பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படத்தின் மூலம் கிடைத்த புகழ் காரணமாக இவரை கயல் சந்திரன் என ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். கயல் படத்துக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி படத்தில் நாயகனாக நடித்தார் சந்திரன். அப்படம் ரிலீஸ் ஆகாததால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... பிசினஸில் படு பிசியான அஜித்... தள்ளிப்போன விடாமுயற்சி ஷூட்டிங் - எப்போ ஆரம்பம் தெரியுமா?
விஜே அஞ்சனா - கயல் சந்திரன் ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. விஜே-வாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா, சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் விஜே அஞ்சனாவுக்கு 14 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அஞ்சனா.