1980களில் இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'கல்யாண அகதிகள்' என்கிற படம் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நாசர். தொடர்ந்து நாயகன் படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில், குணச்சித்திர வேடத்திலும், வில்லன், கதாநாயகன் போன்ற ரோல்களிலும் நடித்து வருகிறார்.
ஜவஹர், 1990 களில் இருந்து ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன், போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணி புரிந்ததோடு சொந்த மாக வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார். அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான் ஜி வி 2 , பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள். இதை தொடர்ந்து, தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு அளித்ததை எண்ணி மிக மகிழ்ச்சி யோடு குறிப்பிட்டார்.
தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வரும் விதத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரம் அமைந்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அச்சு அசல் அண்ணன் நாசர் போலவே இருக்கும், இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.