எனது மகளும் வேலையில்லாமல் கை குழந்தையுடன் கஷ்டப்படுகிறால், அவளையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். தினம் தினம் வலியால் துடிப்பதற்கு பதில் எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என டாக்டர்களிடம் கேட்டு பார்த்தேன். இந்த பேட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்று எனது சிகிச்சைக்கும், எனது மகளுக்கு அரசு வேலையும் கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அப்புறம் ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என தெரியவில்லை.
வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டும் என்றால் சாப்பாடுவதற்கு கஷ்டப்படுறேன். வெளிநபர்களிடம் இருந்து கூட கடன் வாங்கிவிடலாம். ஆனால் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்கிவிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். ஷகிலா, நடிகர் பிளாக் பாண்டி, ஜெயலட்சுமி என பலரும் எனக்கு சிறுக சிறுக உதவி வருகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசி உள்ளார் சிந்து.
இதையும் படியுங்கள்... 'மாமன்னன்' படத்தின் அடுத்தகட்ட பணியை துவங்கிய மாரிசெல்வராஜ்..! வைரலாகும் புகைப்படம் ..!