வரலட்சுமிக்கு எப்போ டும்டும்டும்?... முதன்முறையாக மகளின் திருமணம் குறித்து மனம்திறந்து பேசிய சரத்குமார்

First Published | Mar 3, 2023, 7:38 AM IST

நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்து இருக்கிறார்.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்து பாராட்டுக்களை பெற்ற இவர், ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

குறிப்பாக வரலட்சுமி வில்லியாக நடித்த சர்கார், சண்டைக்கோழி 2 ஆகிய திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தன. பின்னர் தமிழில் நீயா 2, டேனி, வெல்வெட் நகரம், கன்னிராசி, சேசிங், சிங்கபார்வை என ஏராளமான படங்களில் இவர் நடித்திருந்தாலும், அந்த படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற வரலட்சுமிக்கு, அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... டேஞ்சரஸ் ராஜு... ஜெயிலின் உள்ளே நிற்கும் அரவிந்த் சுவாமி..! வெறித்தனமான போஸ்டரை வெளியிட்ட 'கஸ்டடி' படக்குழு!

Tap to resize

இதனால் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி. சமீபத்தில் கூட பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்திருந்த வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது. அடுத்ததாக நடிகை வரலட்சுமி நடிப்பில் கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வரலட்சுமியின் தந்தை சரத்குமாரிடம், அவரது மகளின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சரத்குமார், “அது வரலட்சுமியுடைய விருப்பம். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன். தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என வரலட்சுமி வந்து என்னிடம் கூறும்போது அவருக்கு திருமணம் செய்துவைப்பேன்” என கூறினார். நடிகர் விஷாலை சில ஆண்டுகள் காதலித்த வரலட்சுமி, பின்னர் அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அழகூரில் பூத்தவளே... பாவாடை தாவணி அழகில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்த கன்னக்குழி நடிகை சிருஷ்டி டாங்கே..!

Latest Videos

click me!