37 வயசு தான் ஆகுது.. என்ன ‘ஆண்ட்டி’னு சொன்னீங்கனா போலீச கூப்பிடுவேன்- நெட்டிசன்களுக்கு வார்னிங் கொடுத்த அனசுயா

First Published | Aug 27, 2022, 7:35 AM IST

Anasuya Bharadwaj : அர்ஜுன் ரெட்டி படத்தை விமர்சித்த போது தன்னை படாதபாடு படுத்திய விஜய் தேவரகொண்டா ரசிகர்களை பழிவாங்கும் நோக்கில், லைகர் படத்தை மறைமுகமாக சாடி பதிவிட்டிருந்தார் அனசுயா.

தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் அனசுயா. சின்னத்திரை மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. கடைசியாக இவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து இருந்தார். இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இதையடுத்து தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனை உள்ளது. இதற்கு காரணம் அர்ஜுன் ரெட்டி படம் தான். அப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும், அதனை அனசுயா விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். அதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்தனர். 

Tap to resize

இதனிடையே நேற்று முன்தினம் வெளியான விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தை விமர்சித்த போது தன்னை படாதபாடு படுத்திய விஜய் தேவரகொண்டா ரசிகர்களை பழிவாங்கும் நோக்கில், லைகர் படத்தை மறைமுகமாக சாடி பதிவிட்டிருந்தார் அனசுயா. இந்த பதிவை பார்த்து கடுப்பான விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அனசுயாவை ஆண்ட்டி என ட்ரோல் செய்ய தொடங்கினர்.

இதையும் படியுங்கள்... 'பாரிஜாதம்' பட ஹீரோயின்... நடிகர் பாக்யராஜ் மகள் சரண்யாவா இது? அடையாளமே தெரியலையே... லேட்டஸ்ட் போட்டோ!

தன்னை ஆண்ட்டி என விமர்சிப்பவர்களுக்கு வரிசையாக டுவிட்டரில் பதிலடி கொடுத்து வந்தார் அனசுயா. இதையடுத்து தான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. பதிலுக்கு விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் Aunty என்கிற ஹேஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்டாக்கினர். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அனசுயா, தன்னை ஆண்ட்டி என விமர்சிப்பவர்களின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீசுக்கு அனுப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதிவிட்டார்.

அவரின் இந்த எச்சரிக்கைக்கு பின்பும் ஆண்ட்டி என கூறி ட்ர்ரோல் செய்வதை விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கைவிடவில்லை. தொடர்ந்து விமர்சித்தவர்களிடம் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் தன்னை 25 வயதுக்கு மேல் உள்ள நீங்கள் எப்படி ஆண்ட்டி என்று அழைக்கலாம் என கேள்வி எழுப்பினார். சில திரைப்பிரபலங்கள் அனசுயாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும், அவர் மீதான ட்ரோல்கள் டுவிட்டரில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. 

இதையும் படியுங்கள்... 14 வயதில் மகள் இருக்கும் நிலையில்... மீண்டும் குட் நியூஸ் சொன்ன நடிகர் நரேன்! வைரலாகும் புகைப்படம்!

Latest Videos

click me!