பாக்யராஜின் தனித்துவமான படைப்புகளுக்கு தமிழ் மொழியில் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நடிகர் பாக்யராஜ் குடும்பமே ஒரு கலைக்குடும்பம் தான். இவருடைய மானைவி 80 களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். 'டார்லிங் டார்லிங்' படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.
இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா மகளும் உள்ளது அனைவருமே அறிந்தது தான். சாந்தனு குழந்தையாக இருக்கும் போதே... திரைப்படங்களில் நடிக்க துவங்கியவர். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இவர் தரமான, வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையிலும் , அவர் தந்தை ஒரு நடிகராக பிடித்த இடத்தை இவரால் இன்னும் எட்டி பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
மேலும் செய்திகள்: 14 வயதில் மகள் இருக்கும் நிலையில்... மீண்டும் குட் நியூஸ் சொன்ன நடிகர் நரேன்! வைரலாகும் புகைப்படம்!
அதே போல் பாக்யராஜின் மகள், சரண்யாவும்... நடிகர் ப்ரித்விராஜுக்கு ஜோடியாக 'பாரிஜாதம்' என்கிற படத்தில் நடித்தார். முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திரையுலகில் இருந்து விலகி மேல் படிப்புக்காக வெளிநாடு பறந்தார்.
பாக்யராஜின் மகன் சாந்தனுக்குவுக்கு திருமணம் ஆகி விட்டாலும், சரண்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரை பல வருடமாக காதலித்து வந்ததாகவும், பெற்றோர் இவர்களது காதலுக்கு ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைக்க தயாராக இருந்த நிலையில், ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில், அப்போது எடுக்க பட்ட புகைப்படத்தில், சரண்யாவும் உள்ளார். இவரது தற்போதைய புகைப்படத்தை பார்த்தல்... அன்று பாரிஜாதம் படத்தில் அழகு தேவதையாக நடித்தவரா இவர்? என அனைவருமே ஆச்சரியப்படுவார்கள். துளியும் மேக்அப் இல்லாமல் மிகவும் எளிமையாக... சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.