இந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டபோது சில விமர்சனங்களுக்கு ஆளானாலும், நடிகர் கமல்ஹாசன் இதனை சரியான புரிதலை மக்களிக்கிடம் எடுத்து கூறி இந்த நிகழ்ச்சி மீது அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டினார்.
பிக்பாஸ் நான்கு சீசன்களில் மக்களுக்கு பிரபலமான நடிகர்கள் நடிகைகள் சீரியல் பிரபலங்கள் பாடகர்கள், டான்ஸ் மாஸ்டர், மாடல், தொகுப்பாளர், மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், சீசன் 5 நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக கானா பாடகி, தெருக்கூத்து கலைஞர் மற்றும் யூ டியூப் பிரபலம் ஆகியோர் கலந்து கொண்டது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க...பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கிறீர்கள் என்கிற காரணத்தை கூறி வீடியோ பதிவேற்ற விஜய் டிவி அறிவித்துள்ளது. அதாவது பிக் போஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நினைக்கும் அந்த சாமானியன்... ஏதேனும் சாதிக்க துடிக்கும் நபராக இருந்தால், அவருக்கு முன்னுரிமை கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. நடிக்கும் ஆர்வம், திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள சிலருக்கு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்புகள் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை, யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .