ஜாம் ஜாம்னு நடந்த அமீர் - பாவனி ஜோடியின் திருமணம் - வைரலாகும் போட்டோஸ்

Published : Apr 20, 2025, 01:35 PM IST

பிக் பாஸ் பிரபலங்களான அமீர் - பாவனி ரெட்டி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
16
ஜாம் ஜாம்னு நடந்த அமீர் - பாவனி ஜோடியின் திருமணம் - வைரலாகும் போட்டோஸ்

Amir Pavani Reddy Marriage : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல காதல் ஜோடிகள் உருவானாலும் அந்த காதலெல்லாம் திருமணத்தில் முடிந்ததில்லை. முதல் சீசனில் இருந்தே இந்த டிரெண்ட் தொடர்ந்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட அமீரும், பாவனி ரெட்டியும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிக் பாஸ் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

26
Amir and Pavani

Amir - Pavani காதல் கதை

பாவனி விஜய் டிவியின் சின்னத்தம்பி, ரெட்டைவால் குருவி என பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் பாவனியின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன அமீர், நாளடைவில் அவரது ரசிகனாகவே மாறிவிட்டார். இதுதவிர விஜய் டிவியில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்த அமீருக்கு திடீரென பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளே சென்ற அமீர், அங்கு பாவனியிடம் தன்னுடைய காதலை சொல்லிவிட்டார்.

36
Amir - Pavani Love

Pavani-யின் கண்ணீர் கதை

பாவனி ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் தெலுங்கு சீரியலில் நடித்தபோது பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு திருமணமான சில மாதங்களிலேயே பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார் பாவனி. அதில் இருந்து மீள படிப்படியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். அப்படி அவர் பங்கேற்றது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

46
Bigg Boss Amir - Pavani

Amirக்கு நோ சொன்ன Pavani

அமீர் காதலை சொன்னாலும் அவரின் காதலுக்கு பாவனி சம்மதிக்கவில்லை. முதல் காதலன் தற்கொலை செய்துகொண்டதால் திருமணமே வேண்டாம் என்கிற முடிவில் தான் இருந்தார் பாவனி. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அமீரின் காதலை பாவனி ஏற்கவில்லை. இதையடுத்து இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியில் டைட்டிலையும் வென்றனர். அதன்பின்னர் தான் அமீரின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார் பாவனி.

இதையும் படியுங்கள்... தடபுடலாக நடந்த பிக்பாஸ் காதலர்கள் ‘அமீர் - பாவனி’ ஹல்தி கொண்டாட்டம்

56
Amir Pavani wedding

திருமணத்திற்காக 3 ஆண்டுகள் காத்திருந்த Pavani 

காதலுக்கு ஓகே சொன்ன பாவனியை திருமணத்திற்காக சுமார் 3 ஆண்டுகள் காத்திருக்க வைத்தாராம் அமீர். அதுவரை இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டே இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இருவரும் திருமண தேதியை அறிவித்தனர். அதன்படி ஏப்ரல் மாதம் பாவனியை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்தார் அமீர்.

66
Amir - Pavani Marriage

Amir - Pavani திருமணம்

அமீர் - பாவனி ஜோடியின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அமீர் இஸ்லாமியராக இருந்தாலும் அவர் இந்து முறைப்படி தாலி கட்டி பாவனியை மனைவியாக ஏற்றுக்கொண்டார். இவர்களின் திருமணத்தில் பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொண்டார். அவருக்கு அண்மையில் திருமணம் ஆன நிலையில், தன்னுடைய கணவர் வசி உடன் வந்து அமீர் - பாவனி திருமணத்தில் கலந்துகொண்டார் பிரியங்கா. அமீர் - பாவனி ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கடைசி வரை நன்றியுடன் இருப்பேன்.. நடிகை பாவனி ரெட்டியின் லவ்வர் அமீர் சொன்ன குட் நியூஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories